ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்
1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன், யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘கதைகள்’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.
இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான
காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ருத்திரனின் குணங்கள் அனைத்தும்
ஹரிஜனங்களிடம் உள்ளது’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை
நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு
துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும்
என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க
வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக, ருத்திரனுக்கும்
ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
உலகம் கெட்டு விட்டால் அதைச் சரிசெய்து மீண்டும் நிறுவுவது
ருத்திரனின் வேலை. ருத்திரன் கோபமுள்ளவன். கொடுமையாய்ப் பேசுவான். சர்மம்
தரிப்பான். கையிலே எலும்பும் கொம்பும் வைத்திருப்பவன். கிராமத்திற்கு வெளியில்
உள்ளவன். தண்ணீர் தண்ணீர் எனக் கதறுவான். தந்தையைக் கொல்லுவான். மகனை அடிப்பான்.
தாழ்ந்த மக்களே அவனுடைய நண்பர்கள். அவன் ஆட்களை சண்டாளர் என்பார்கள். மலையிலே
வசிப்பான். மடுவிலே ஓடுவான். அம்புடன் வில்லை வளைப்பான். அஞ்சா நெஞ்சு படைத்தவன்.
அலறுவான். கதறுவான். அழுவான். இவன் குணத்தை எல்லாம் நோக்கி இவன் சகாக்களையும்
கவனித்தால் எல்லாம் நீங்களாய்த்தான் இருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. … பூலோகம் முழுவதும் புனித வேதம்
விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான்
உங்களுக்கு அர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் ஜம்புநாதன்.
...........................
Comments