Skip to main content

Posts

பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும் இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்

  பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும் இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம் ஞா.குருசாமி இன்று (25.07.2022) தமிழினியில் பா . திருச்செந்தா ழையின் ‘ வீழ்ச்சி ’ கதை வெளியாகி யி ருக்கிறது . வழமையான ஒரு நடத்தையை புதியதொரு உத்தியி லும் சொல்ல முடியு ம் என்பதற்கு அவரின் ‘தேவைகள்’ கதை நல்ல உதாரணம். அதற்குப் பிறகு அவருடைய கதைகளை விரும்பி வாசித்தேன். சமீபத்தில் வெளியான அவரது ‘விலாஸம்’ கதைத் தொகுதி, கதை சொல்லலின் பல புதிய கோணங்களைப் பரிசோதித்திருந்தது. திருச்செந்தாழையின் கதைகள் வணிக உலகத்தின் ஏற்றம், மாற்றம், துரோகம், போலியான கரிசனம், பெருவணிகத்தின் வரவு, சிதறும் சிறுவணிகம், வணிகத்தில் தாக்குப் பிடிக்கும் வல்லமை பற்றி அசாத்தியமான புனைவில் அமைந்தவை. வணிகம் என்பது வணிக லாபம் பார்ப்பது மட்டுமல்ல. சக வணிகனை வெல்வதும், களத்தை விட்டே துரத்தியடிப்பதும் வணிகம் தான் என்பதை வேறுவேறு கோணத்தில் நின்று வாசகனை உணர வைப்பவை. சிவபாலன் , சகுந்தலா , தினகரன் , காசி நால்வரும் தான் வீழ்ச்சி கதையின் முக்கியப் பாத்திரங்கள். சகுந்தலாவின் அப்பா பெரிய அளவில் இரட்டை மாடி மளிகை க் கடை நடத்தியவர் . தொழில் வ...

கு.இலக்கியனின் ‘காத்தாள்’ கதை

  கு . இலக்கியனின் ‘ காத்தாள் ’ கதை பணம் இருந்தால் குற்றக்கண்மாயின் கசிவை அடைத்து விடலாம் என்பது ஓர் அசைக்க முடியாத கருத்தியலாகவே இருந்து வருகிறது . அதை இலக்கியம் சினிமாக்கள் நிறைய பேசியிருக்கின்றன . ஒரே விஷயத்தை ஏன் திரும்பத் திரும்ப பேச வேண்டும் என நான் யோசித்தது உண்டு. ஆனாலும் பேச வேண்டிய தேவை இருப்பதை சீக்கிரமே கண்டு கொண்டேன் . ஒரே விஷயம் ஒரே மாதிரி நடப்பதில்லை . வேறுபாடுகள் உண்டு . வேறுபாடுகளைப் பேச வேண்டும் . வேறுபாடுகள் போதி மரங்கள் . வேறுபாடுகளைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் வேஷமற்ற வெகுமக்களின் அரசியலைப் பேசுகிறவர்களாக இருப்பார்கள் . அத்தகையோர்களை உருவாக்கிக் கொண்டே இருப்பதற்கு ஒரே விஷயங்களின் வேறுபாடுகளை எல்லா வடிவங்களிலும் பேச வேண்டியிருக்கிறது . அப்படி பேசிய கதை தான் கு . இலக்கியனின் ‘ காத்தாள் ’ கதை . 2022 ஜூலை ‘ நீலம் ’ இதழில் வெளியாகியிருக்கிறது . பூவான் . காத்தாள் , கொயிந்துப் பண்ணை மூவரும் கதையின் முக்கிய புள்ளிகள் . பூவான் பசுஞ்சோலைக் கிராமத்தின் பரம்பரை வெட்டியான் . பிணம் எரிக்க மேடை தயார் பண்ணுவது , விறகு அடுக்குவது , வேகாத எலும்புகளைப் ப...

இமையத்தின் ‘கொல்லிமலை சாமி’ என்றொரு கதை

  ‘ கொல்லிமலை சாமி ’ என்றொரு கதை 2022 ஜூலை நீ ல ம் இதழில் இ மை யம் ‘ கொல்லிமலை சாமி ’ என்றொரு கதை எழுதி இருக்கிறார் . ‘ஜோ தி ’ என் கிற பெண் தான் கதையின் மையம் . பெரம்பலூரை அடுத்த அன்னமங்கலத்துக்காரி. அவள் ஒரு துறவி . துறந்ததால் துறவி யானவள் அல்ல . அன்னமங்கலத்திலிருந்து துரத்தப்பட்டதால் துறவியானவள் . தேசமெங்கும் சுற்றிவிட்டு தற்போது கொல்லிமலை சேர்ந்து   ‘ கொல்லிமலை சாமி ’ ஆகிப் போனவள். சுற்று வட்டாரத்தில் அவளுக்கு ஏக மரியாதை. துயருடன் வருவோருக்கு து யர் களைவது ஜோ தியின் வேலை . தன்னை நாடி வருவோரின் கதைகளைக் கேட்டுக்கேட்டு மனிதர்களினுடைய அற்பத்தனங்களின் பல்வேறு ரூபங்களைக் கண்டுபிடித்தவள். மனிதர்களின் பலமும் பலவீனமும் அவர்களின் ஏகோபித்த அற்பத்தனங்கள் தான் என்பதை அனுபவத்தில் கண்டவள். தன்னை தேடி வரும் பக்தர்கள் தருவது தான் அவ ள து உணவு . நல்ல அழகி . துறவிக்கு அழகு கூடாது என்பதற்காகவே மொட்டை அடித்துக் கொண்டவ ள். இன்று அவளிடம் அருள் வாக்கு கேட்பதற்காக ஜோதியின் ஊர்க்காரனே ஒருவன் வந்திருக்கிறான். எதிர்பாராத சந்திப்பு. அவள் துறவியானதற்கான காரணத்தை அவளே நினைத்துப் பார்ப்ப...

ஏலாக்குறிச்சி செல்லும் வழி / Elakurichi Bus Rote

  ஏலாக்குறிச்சி செல்லும் வழி ஏலாக்குறிச்சி ஓர் அழகான ஊர். திருக்காவலூர் என்பது அதன் பழைய பெயர்.   கத்தோலிக்கக் கிறித்தவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் பணியாற்றிய பெருமைகொண்டது இவ்வூரில் அமைந்திருக்கும் அடைக்கல மாதா ஆலயம். இங்கிருந்து தான் அவர் தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியவற்றை எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மிக அழகிய வேலைப்பாடுடன் கூட ஆலயக் கட்டுமானம் பிரமிக்க வைக்கிறது. அடைக்கல மாதாவின் சுருபம் சிரித்த முகத்துடன் தமிழ்நாட்டுப் பெண்களின் முகத்தை ஒத்திருப்பதை ஐரோப்பியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ‘மண்ணுக்கேற்ற மதம்’ என்கிற புரிதலில் பணியாற்றியதன் அடையாளமாகக் கொள்ளலாம். ஆலயத்தைச் சுற்றி இருக்கும் வயல்கள் எப்போதும் ஆலயத்தை குளுமையாகவே வைத்திருக்கின்றன. ஆழ்ந்து தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடம். திருச்சியில் இருந்து 68 கிலோ மீட்டர். திருச்சி – கல்லணை – திருவையாறு சென்று   அரியலூர் சாலையில் சென்றால் 10 கி.மீ துரத்தில் திருமானூர் வரும். அதில் இருந்து...

மனைக்குறி சாஸ்திரம் - சில விவாதக் குறிப்புகள்

கட்டுரை மனைக்குறி சாஸ்திரம் - சில விவாதக் குறிப்புகள் ஞா.குருசாமி jeyaseelanphd@yahoo.in இப்பொழுதெல்லாம் ‘சாஸ்திரம்’ என்கிற சொல் அதிகமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. ‘சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது’, ‘சாஸ்திர வாக்கு’, ‘சாஸ்திர தர்மம்’, ‘சாஸ்திரக் கட்டுப்பாடு’ என்றெல்லாம் அந்தச் சொல் புழங்கப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் ‘சாஸ்திரம்’ என்கிற சொல்லும், அதன்வழி உருவாக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு வெளியும், அதன்வழியாகக் கிடைக்கின்ற லாபமும் இதுவரை யாருக்கானதாக இருந்திருக்கிறது. யாருக்கானதாக இல்லாமல் இருந்திருக்கிறது என்பது குறித்த விவாதங்கள் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. என்றாலும், அதே வேலையைத் தொடர்ந்து செய்யவேண்டிய தேவை இன்றைக்கு மேலதிகமாக உருவாகிவிட்டிருக்கிறது. வேடனுக்கும் வேட்டை உயிருக்கும் இடையே விரிக்கப்பட்டிருக்கும் வலையின் குணத்தை ஒத்தது சாஸ்திரம். சாஸ்திரத்தை உருவாக்கியவர்களுக்கு அதை உருவாக்காதவர்கள் அனைவரும் வேட்டை உயிர்களே. உயிர்களை வேட்டையாடுவதன் வழி வேட்டை உயிரின் வாழ்வெளியை நிர்மூலமாக்கி அபகரித்தல் தற்செயலாகவே நடைபெற்றுவிடுவதை ஒத்த...

பண்பாட்டுத் தகவமைப்பு: பயணித்த வரலாறும் பயணிக்க வேண்டிய திசையும்

பண்பாட்டுத் தகவமைப்பு: பயணித்த வரலாறும் பயணிக்க வேண்டிய திசையும்   ஞா.குருசாமி  பண்பாடு என்பது பழம்பெருமை பேசுதல் என்னும் நிலையைக் கடந்து வாழ்தலுக்கான உரிமைகளை வரையறை செய்யும் அளவுகோலாக மாற்றப்பட்டிருக்கும் தற்கால டிஜிட்டல் யுகச் சூழலில் பிராந்திய பண்பாடுகளுக்கு நேர்ந்திருக்கும் சிக்கல்களை இனம் கண்டு மீட்டெழுப்புவதற்கான பணிகள் சர்வதேசிய அளவில் குறிப்பாக யுரோவை மையமாக வைத்து தொடங்கப்பட்டு இருபதாண்டு காலம் நிறைவு பெறுகிற இன்றைய தருணத்தில் தான் புதிய சூழலுக்கு தகுந்த தமிழ் பண்பாட்டு மீள் கட்டமைப்பு குறித்து செயல்பட வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கிறது. இந்த காலம் கடந்த முன்னெடுப்புக்குக் காரணம் நாமில்லை என்றாலும் இன்றைய பண்பாட்டு உருவாக்கம் அல்லது மீள் கட்டமைப்பு என்பது உலகச் சந்தையின் ஒற்றை பொருளாதார கோட்பாட்டுச் சித்தாந்தத்தின் பி;ன்புலத்தில் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் உருவாக்கும் போதே அதற்கான விளைவுகளையும் அறிந்து ஆயத்தமாகிக் கொண்டார்கள். ஆனால் மத்திய மற்றும் கிழக்காசிய நாடுகள் ஒற்றை பொருளாதாரக் கோட்பாட்டினால் ஏற்பட்ட பண்பாட்டுச் சிதைவுகளை அனுபவ ரீதியாக உணர்ந்து கொ...

பண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி

ப ண் பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி ஞா.குருசாமி, அரசுக்கும் மக்களுக்குமான வெளி சிறுகச் சிறுக அதிகரித்து இன்று உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியாளர்களின் சிந்தனையும் செயல்பாடும் அவர்களின் உள்மனவெளியின் பாசாங்குத் தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. மக்கள் எல்லாவற்றையும் சகிக்கப் பழகிவிட்டிருப்பதுதான் காலத்தின் பேரவலம். ‘கறுப்பாக இருப்பவர்கள் இந்தியர்கள் அல்ல’, ‘சிறுபான்மையினர் தேசத் துரோகிகள’;, ‘லெக்கின்ஸ் அணியும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள’; என்றெல்லாம் ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்ட ஆபத்தான பேச்சுகளுக்கும் பண்பாட்டோடு தொடர்புடைய பிற்போக்கான கருத்துக்களுக்கும் மக்கள்திரள் போதுமான எதிர்வினையைக் காட்டாதது சமுதாய அக்கறையுள்ளவர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தேசியச் சூழல் இப்படியிருக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள் ஏராளம். இவைகளுக்கு இடையில் எல்லாவற்றுக்கும் ஏங்கித் தவிக்கும் சமூகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுவிட்டது. வாழ்தலுக்கான இருத்தலுக்கே ஏங்கித் தவிக்கும் சூழலில் பண்பாட்டை முன்னெடுக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் அவதானிக்க ...