விருதுநகர்
மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள
அக்கனாபுரம் எனது சொந்த கிராமம். எனது பெற்றோர் கு.ஞானப்பிரகாசம், ம.அருளாயி. எனது தொடக்கக் கல்வியை
தைலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் இடைநிலைக்கல்வியை தைலாபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளியிலும் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றேன்.
மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் இளம் இலக்கியமும் (பி.லிட்), மதுரை, மதுரைக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியமும் கற்றேன்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முனைவர் பட்டம். 18.06.2012 முதல் மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர்
கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கவிதை
எழுதுவதில் ஆர்வம் இருப்பினும் ஆய்வுகளில் கவனம் செலுத்துவதில் பெரு விருப்பம்.
இருபது ஆண்டுகளாக மாற்றுச் சிந்தனையைச் சார்ந்து இலக்கியம், இலக்கணம், சமுதாயம் குறித்து பேசியும் எழுதியும் வருகிறேன்.
நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை
எழுதியுள்ளேன். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு - தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு - வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய
குறிப்புகளுடன் 1970 முதல்...), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் - நிலம் - சாதி - சாஸ்திரம்' முதலிய நூல்கள் எழுதியுள்ளேன்.
ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து…. ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன. இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம்...
Comments