Skip to main content

Posts

Showing posts from January, 2026

அஞ்சலி : கிளாடெட் கோல்வின் (1939 – 2026)

               கிளாடெட் கோல்வின்   தன்னுடைய பதினைந்தாவது வயதில் அமெரிக்காவினுடைய   அலபாமாவின் மான்ட்கோமரியில்   அனைவருக்குமான பொதுப் பேருந்தில்   தனது இருக்கையை   வெள்ளையினப் பெண்ணுக்கு   விட்டுக்கொடுக்க மறுத்ததற்காகக் கைது செய்யப்பட்ட முதல் நபர் ஆவார். அவர்   கடந்த  2026  ஜனவரி  13  அன்று   தன்னுடைய 86 வது வயதில்   இறந்தார். செப்டம்பர்  5, 1939  அன்று பிறந்த கோல்வினைப் பற்றி   வாழ்க்கை வரலாற்றாசிரியரான   பிலிப் ஹூஸ்   சொல்லும்போது ,  செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய வீடுகளும் ,  திறந்தவெளி கழிப்பறைகளும் நிறைந்த ,  தார் போடப்படாத   மூன்று   தெருக்கள்   கொண்ட   ஒரு பகுதியில் வளர்ந்தார்   என்று குறிப்பிடுகிறார்.  கிளாடெட் கோல்வின்              குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த   கோல்வினை அவரது பெரிய அத்தை மேரி ஜேன் ,  பெரிய மாமா கியூ.பி. ஸ்மித் ஆகிய...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...