![]() |
| கிளாடெட் கோல்வின் |
குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த கோல்வினை அவரது பெரிய அத்தை மேரி ஜேன், பெரிய மாமா கியூ.பி. ஸ்மித் ஆகியோர் வளர்த்தனர். அவர் எப்போதும் புத்தகங்களால்
சூழப்பட்டிருந்தார். சிறுமியாக
இருந்தபோது,எட்கர் ஆலன் போ, வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை வெறித்தனமாகப் படித்தார்.
பதின்ம வயதில் கோல்வின் கடுமையான தென்பகுதியில் ஜிம் க்ரோ சட்டங்களின் கொடுமைகளை
அனுபவித்தார். பள்ளியில், அவர் (கறுப்பர்களோடு தொடர்புடைய) 14வது சட்டத் திருத்தத்தைப் பற்றி அறிந்துகொண்டார். அதே காலத்தில் தனது சொந்த ஊரில் நிலவிய இனப் பாகுபாட்டை விவரிக்கும் ஒரு கட்டுரையை
எழுதினார். பொய்யான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட கறுப்பின இளைஞரான ஜெரெமையா ரீவ்ஸின் வழக்கை அறிந்து கோல்வின்
அரசியல் விழிப்புணர்வைப் பெற்றார். ரோசா
பார்க்ஸ் இந்த இயக்கத்தின் முகமாக மாறுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு தான் கோல்வின், வெள்ளைப் பெண்ணுக்கு இருக்கை கொடுக்காமல் அமர்ந்திருந்த சம்பவம் நடைபெற்றிருந்தது.
பின்னொரு நாளில் அந்தச் சம்வத்தை நினைவுகூரும் போது கோல்வின், ஹாரியட் டப்மன் ஒரு தோளிலும், சோஜர்னர் ட்ரூத் மறு தோளிலும் தன்னை அழுத்துவது போல் உணர்ந்ததாகவும், அது தனது மறுப்பை ஒரு விதியாகத் தோன்றச் செய்ததாகவும் கூறினார்.
காவல்துறையினர் கோல்வினை இருக்கையிலிருந்து
இழுத்தபோது, அவர்கள் அவரது
உடல் குறித்து பொருத்தமற்ற கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர் அவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவோம் என்று அஞ்சினார். அந்த நேரத்தில் கோல்வின் போவின் ‘அன்னபெல் லீ’, 'எ மிட்ஸம்மர் நைட்ஸ் ட்ரீம்' நாடகத்தின் சில பகுதிகளையும், விவிலியத்தில் சங்கீதம் 23இல் உள்ள
வசனங்களைச் சொல்லி தனது மனதை
அமைதிப்படுத்திக்கொண்டார்.
புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில், கோல்வின் கறுப்பின வரலாற்றை ஆழமாகவும் அரசியலமைப்பு உரிமைகளுக்காக வாதிடவும் கற்றுக்கொண்டார். NAACP-யின் இளைஞர் மன்ற உறுப்பினராக இருந்தபோது, ரோசா பார்க்ஸ், வர்ஜீனியா டர் போன்ற மூத்த அமைப்பாளர்கள் தனது வழக்கை நடத்துவதற்காக
வழக்கறிஞர்களையும் பணத்தையும் திரட்டுவதை அவர் கண்டார். பார்க்ஸ் கோல்வினைச்
செயலாளராக ஆக்கி, தனது அனுபவத்தை மீண்டும் மீண்டும்
சொல்லும்படி அவரை ஊக்குவித்தார். பிறருக்கு வழிகாட்டுதலின் வழி, தலைமைத்துவம்
என்பது பயிற்சியாலும் அசைக்க முடியாத
அர்ப்பணிப்பிலிருந்தும் வருகிறது என்பதை
கோல்வின் கற்றுக்கொண்டார்.
மாண்ட்கோமரியில் பேருந்துப் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த
வழக்கான பிரௌடர் எதிர் கெய்ல் வழக்கில் கோல்வின் ஒரு வாதியாக ஆனார்.
பாடப்புத்தகங்களில் அரிதாகவே பெயர்கள் இடம்பெறும் மற்ற பெண்களுடன் அவர் பெயரும் இடம் பெறலாயிற்று.
இயக்கத்தின் மெருகூட்டப்பட்ட தலைவர்களுக்கும், செய்தித்தலைப்புகளை நிரப்பிய சொற்பொழிவாளர்களான ஆண்களுக்கும் முன்பே, பெண் தொழிலாளர்கள்
சமையலறைகளிலும் பேருந்து நடைபாதைகளிலும் இனவெறிக்கு எதிர்ப்பின்
அறிகுறிகளைக் காட்டினர். பிற்காலத்தில், கோல்வின் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்து, பல பத்தாண்டுகள் ஒரு செவிலியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து தனது மகன்களை வளர்த்தார்.
இன்று, இளம் ஆர்வலர்கள்
அமைப்பு ரீதியான இனவெறியை தொடர்ந்து எதிர்கொள்ளும் வேளையில், கோல்வின் வாழ்க்கை நீதிக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. தைரியம் அனுமதிக்காகவோ முழுமைக்காகவோ காத்திருப்பதில்லை. அது ஒருவரின் உரிமைகளை அறிவதிலிருந்தும் சமூகத்திலிருந்து வலிமையைப்
பெறுவதிலிருந்தும் வருகிறது என்பதை அவரது வாழ்க்கை காட்டுகிறது.
அனுபவமிக்க விமர்சகர்களின் முன்கணிப்பையும் மீறி அவர் ஓர் இளம் அமைப்பாளராக வளர்ந்தார். பதினைந்து வயதில் அவர் காட்டிய
எதிர்ப்பு, விடுதலை இயக்கங்கள்
நன்கு பிரபலமான
அடையாளங்களை மட்டுமல்லாமல், இளைஞர்களின் தூய்மையான தார்மீகத் தெளிவையும் சார்ந்துள்ளது என்பதை
நிரூபித்தது. ‘வரலாற்றில் சில அடையாளங்களுக்கு மட்டுமே இடம் உண்டு’ என்று கோல்வின் கூறுவார். ஆனால் மற்ற அடையாளங்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும். அவருடைய உதாரணம் அதையே செய்தது.
ஆங்கில மூலம் : கியாங்கா மூர்
தமிழில் :
ஞா.குருசாமி
...................

Comments