Skip to main content

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026 ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம்பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட உங்க கனவ சொல்லுங்கநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம், கரிவேடு ஊராட்சி, சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம்.அமுதா தனது கனவைச் சொன்னார்பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி/ எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார். அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம்எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறதுஎன்கிற அழுத்தம் தான். அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு. ஆனால்எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லைஎன்கிற ஒப்பீடு சரியானதல்ல. தவிர, இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அவரது பேச்சின் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்குக் கிடைத்த கைதட்டலே சான்று. உண்மையில் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதை விட எஸ்சி / எஸ்டிகளுக்கு கிடைக்கிறது என்பதே அவரது கவலையாகத் தெரிகிறது. இந்த மனநிலை எங்கிருந்து உருவாகிறது? இந்த மனநிலையைத் தவறு என்று புரிய வைப்பதில் சமூகம் ஏன் தோற்றுவிட்டிருக்கிறது?இதேபோன்ற குரலைத் தான் சர்வதேச அளவில் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நோபல் பரிசு வேண்டும் எனக் கேட்டுப் பெறுவது அவரது விருப்பம். ஆனால், ‘எட்டுப் போர்களை நிறுத்திய தனக்குக் கிடைக்கவில்லை. எதுவுமே செய்யாத பாரக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்று அங்கலாய்க்கிறார். தனக்குக் கிடைக்கவில்லை என்பதை விட ஒபாமாவுக்குக் கிடைத்திருப்பது தான் அவரது கவலை. இது அவரின்ஜனநாயகத் தன்மையை மதிப்பிடுவதற்குப் பொருத்தமான அளவுகோல். அமுதாவும் டிரம்ப்பும் சிந்தனை அளவில் கச்சிதமாக ஒன்றுபடுகிறார்கள்.

இணைப்பு:
1)  எம். அமுதாவின் பேச்சு.
 https://www.facebook.com/SunNewsTamil/videos/1188817136260945

2)     8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு இல்லையா? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரக்தி
https://www.hindutamil.in/news/world/should-not-i-receive-nobel-prize-for-stopping-8-wars-us-president-trump






Read in Enlish...

On January 9, 2026, the 'Tell Us Your Dream' program, attended by the Chief Minister, was held in Ponneri, Ranipet district. M. Amutha, a resident of Siddhanji village in the Kaveripakkam union of Ranipet district and the facilitator of the Gangaiamman Women's Self-Help Group operating in the same village, was invited to share her dream.

Amutha, who has been earning a living for fifteen years through a flour grinding machine after obtaining various loans, complained that while SC/ST communities receive subsidized loans, they only receive direct loans. The crucial point in her speech was the underlying sentiment of "If everything is given to SC/STs, where do we go?" She has the right to ask for and receive what she needs. However, the comparison, "What SC/STs receive, we don't," is not appropriate. Moreover, the applause she received for that particular statement suggests that this is not just her personal opinion, but rather reflects the mindset of the collective community. In reality, her concern seems to be less about what she doesn't receive, and more about what the SC/ST communities do receive. Where does this mindset originate? Why has society failed to make people understand that this mindset is wrong?

President Trump expresses a similar sentiment on an international level. It is his wish to receive the Nobel Prize. However, he laments, "I stopped eight wars, yet I didn't get it. But Barack Obama, who did nothing, received it." His concern is not so much about not receiving it himself, but rather about Obama receiving it. This is a fitting yardstick to evaluate his 'democratic' nature. Amutha and Trump perfectly align in their way of thinking. The fact that the voices of those in positions of social and political power have begun to openly and publicly express hatred towards the minimal rights and recognition granted to marginalized groups is a sign that support for such sentiments has increased.

****************



Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...