Skip to main content

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

 தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

கோவை பீளமேட்டில் பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம்தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது. அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார். பெரியாரியம் குறித்து கு.ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட தியாகு மார்க்கியம் குறித்துப் பேசினர்நான் அம்பேத்கரியம் குறித்துப் பேசினேன். அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன். மனநிறைவான நிகழ்வாக அமைந்தது.


சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே. அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின. ஒருவர் மாற்றுத்திறனில் 21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது. எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும்என்றார். ‘நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும்என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார். ‘நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்து கொள்ள முடியும். எங்களால் துணையாள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. என்னைப் போலவே எனது மனைவியும் பார்வையற்றவர். எங்கள் வீட்டுக்குள் பாம்பு வந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நடக்க இயலாதவரால் குறைந்த பட்சம் ஒதுங்கிக்கொள்ளவோ, சத்தமிட்டு உதவி தேடிக்கொள்ளவோ முடியும். அந்த நிலையில் எங்களை நினைத்துப் பாருங்களேன்!’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ‘21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு என்று நீண்டகாலமாக இருந்துவரும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்என்றார்.


பெரும்பாலும் அவர்கள் பார்வைத் திறன் கொண்டவர்களோடு போட்டியிட்டு படிப்பது, வேலை பெறுவது, தரமான புத்தகங்கள் பிரெய்லியில் கிடைக்காதது, பார்வைத்திறனுள்ள வாழ்க்கைத் துணைக்காகக் காத்திருப்பது என ஏராளமான துயரத்தோடு பிணைந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள் பெரும்பாலும் கலை, இலக்கிய ஆசிரியர் பணியிலேயே அமர்கின்றனர். அதன் பிறகு அவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்வதற்குப் புத்தகங்கள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஒருசில ஆடியோ புத்தகங்களில் ழ, , , , , , , ன எழுத்துகளின் சரியான உச்சரிப்பு இல்லாததால் குழப்பம் ஏற்படுகிறது. இதெல்லாம் பார்வைத்திறனுள்ளவர்களுக்கு மிகச் சிறிய சாதாரண விசயங்கள். என்றாலும் அதைக்கூட பார்வையற்றவர்களுக்குச் செய்துகொடுக்க இங்கு நிருவாகக் காட்டமைப்போ, சமூகக் கட்டமைப்போ இல்லை என்பது தான் கொடுந்துயர். இது வளர்ந்தவர்களுக்கான பிரச்சினை என்றால், அதைவிடத் துயரமானதாக இருக்கிறது வளர்கின்றவர்களுக்கான பிரச்சினை.


பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள் தொலைதூரத்தில் உள்ளதால் உள்ளூர் பள்ளியிலேயே சேர்க்கப்படும் பார்வையற்ற குழந்தைகளின் அறிதிறன் பின்னடைவு எதிர்காலத்தில் அவர்களுக்கு மோசமான வாழ்க்கையைத் தான் தருகிறது. பார்வையுள்ள குழந்தைகளோடு பழகும்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியான நிலைமைக்குள் இருந்துதான் அவர்கள் பிழைக்க வேண்டியுள்ளது.


இவ்வளவுக்கும் மத்தியில் செலவு செய்து ஆளுமைகளை அழைத்துப் பேச வைத்துக் கலந்துரையாடுகின்றனர். ‘ஆளுமைகளை நேரில் சந்தித்து கைகுலுக்கி உரையாடுவதன் வழி அவர்களுக்குள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கிடைக்கிறது. புத்தகமில்லாத குறையை, அதிகமாக வாசிக்க வேண்டிய தேவையை ஒரளவு ஆளுமைகளின் உரை நிவர்த்தி செய்கிறது. அதற்காகவே இதை நடத்துகிறோம்’ என்கிறார் மையத்தின் உறுப்பினரான முனைவர் பட்ட ஆய்வாளர் மகாலிங்கம்.

எனது ஒருமணி நேர உரைக்குப் பிறகு கலந்துரையாடல் மட்டுமே முக்கால் மணி நேரம் நடந்தது. அவர்களது கேள்விகளில் இருந்த தேடல் அவர்களுடையத் தேவைகளை வெளிப்படுத்தியது. பிரெய்லி புத்தகங்கள் கிடைக்காத குறையை ஏதாவது ஒரு வழியில் சமன்செய்து விட முடியுமா என்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேராசிரியர் சுகுமாரனையும் அவர்தம் குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்அரசாங்கம் அவர்களது நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும்.

படங்கள் உதவி : ஶ்ரீதர்

.....................





Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...