Skip to main content

Posts

Showing posts from December, 2025

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

  ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து…. ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன. இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம்...

தொடரும் துயரம்

 பள்ளி உணவு சமைப்பதில் மீண்டும் தொடரும் வன்கொடுமை. கரூர் மாவட்டம் சின்னரெட்டிபட்டியின் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் கிழ் சமையலராகப் பணிபுரிந்த நிரோஜாவை டிசம்பர் 16 ஆம் தேதி சமைக்க விடாமல் தடுத்துள்ளனர் சாதி இந்துக்கள். பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, மகளிர் திட்ட கிளை மேலாளர் சத்யா ஆகியோரும் குற்றத்திற்குத் துணையாக இருந்திருக்கின்றனர். ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு பிறகு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  2018 இல் திருப்பூர் அருகில் உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் பட்டியலினத்தைச் சார்ந்த பாப்பாள் என்பவரைச் சமையல் செய்யவிடாமல் தடுத்தனர். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட 36 பேரில் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 நபர்கள் மரணம். 6 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இது மிகவும் குறைவான தண்டனை என்று வழக்கறிஞர் ப.பா.மோகனும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். குறைவான தண்டனையும் அபராதமும் விதித்தல், குற்றவாளிகளை விடு...