பெண் – பதிவிரதை X தடிக்கழுதை ஞா.குருசாமி ‘த டி க் கழுதை பாட்டு ’ என்று ஒரு நூல் . இதில் ‘ ஆண்பிள்ளை வீ ண்பிள்ளை ’, ‘ விலைமாதர் கு ம் மி ’ என்ற நூலும் உள்ளடங்கி இருக்கிறது . 1914 ஆம் வருடம் மதறாஸ் என் . சி , கோ ள் டன் (கோல்டன்?) அச்சியந்திர சாலையில் திருப்போரூர் டி கோபால் நாயகர் இந்த மூன்று நூல்களையும் ஒருங் கே பதி ப்பித் திருக்கிறார் . அதற்கு முன்னால் 1905 வருடம் மயிலம் சுப்பிரமணியசுவாமிகளால் பார்வையிடப்பட்டு பார்த்தசாரதி நாயுடுவின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறுமணவூர் முனியசாமி முதலியார் இந்த நூல்களை எழுதியதாக த் தெரிகிறது . பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை தனி யொரு மனிதனாக ஏராளமான நூல்களை எழுதியவராகவும் பதிப்பித்தவராக வும் தெரிகிறார். சிறுமணவூர் முனியசாமி முதலியார் (இனி முனியசாமி எனச் சுட்டலாம்). இவர் குறித்து வீ. அரசு க ட்டுரை ஒன்றை க் கூட எழுதியிருக்கிறார் . அச்சு பண்பாட்டில் முனியசாமி யின் பங்களிப் பை பதிவு செய்வதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது . நிற்க. 18 ,19 ஆம் நூற்றாண்டுகள...