Skip to main content

Posts

தமிழர் பண்பாட்டு, வீரவிளையாட்டென்னும் ஜல்லிக்கட்டு – சில விவாதக் குறிப்புகள் - ஞா,குருசாமி

  16.01.2013 அன்று மதியம் முகநூலை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா வினவியிருந்த வினா ஒன்று கண்ணில் பட்டது. தமிழர்களின் விளையாட்டுகள் பற்றி நிறைய யோசிக்க வைப்பதாக அந்தக் கேள்வி அமைந்திருந்தது. ‘ ஆண்களால் மட்டுமே விளையாடப்படும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த , குறிப்பிட்ட சாதியினரால் , சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளையாடப்படும் ஒரு விளையாட்டு எப்படித் தமிழர் விளையாட்டாகும் ?’ என்பதுதான் அந்தக் கேள்வி. தமிழர் யார் ? என்று வரையறுப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. வரையறைகள் முன்வைக்கப்படும் போது வரையறைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு அது ஆத்திரம் ஊட்டுவதாகவே அமையும். தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி குறித்த பார்வைகள் சில மட்டங்களில் கூர் தீட்டப்படும் வேளையில் தமிழர் பற்றிய வரையறை உருவாக்கம் எளிதானதல்ல. வரும்காலம் வரையறையை அவசியப்படுத்துவதாகவும் அமையலாம். தமிழ்த்தேசியம் வேகமடைந்திருக்கும் இன்று அதற்குள் நின்று ஆதாயம் தேடுகின்ற ஒவ்வொருவரும் தம்மை தமிழர் என்கின்றனர். ஆதாயம் , பாதுகாப்பு , அரசியல் முன்னகர்வு , பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற நிலைக...

சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல்

            சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல் ஞா.குருசாமி வடமொழி என்பது சமஸ்கிருதம் , பிராகிருதம் , பாலி ஆகிய மூன்று மொழிகளையும் குறிக்கும் . மூன்று மொழிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்களை வடமொழிச் சொற்கள் என்று குறிப்பிடுவது தமிழில் வழக்கம் . அப்படி மூன்று மொழிகளின் சொற்களைத் தமிழில் பொதுப்பெயர்ச் சொல்லால் குறிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது . ஏன் இது நேர்ந்தது என்று தெரியவில்லை .  நெல்லை க . சுப்பிரமணியன் எழுதிய ‘ சாங்கியக் காரிகை ’ என்னும் நூல் 1980 ஆம் ஆண்டு வெளியானது . இந்நூலுக்கான அணிந்துரையை இலங்கை , சிதம்பரா கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கே . எஸ் . கிருஷ்ண ஐயங்கார் ஆங்கிலத்தில்   எழுதியிருக்கிறார் . அதில் கடைசிப் பத்தி ‘The original sutra in sanskirt have been carefully compared with Tamil rendering and I am glad to state that the translate brings out the meaning clearly’ என்பதாக அமைந்திருக்கிறது . இதைத் தமிழுக்கு மொழிபெயர்த்த பா . வளன் அரசு sanskirt என்பதற்கு வடமொழி எனப் பெயர...

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

  எனது ' தமிழ் இலக்கிய வரலாறு ( பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல் )' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ . ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம் தோ .  ஜம்புகுமாரன் அன்பிற்கினிய நண்பரீர் ! ஆன்மநலம் விளைக ! அரியவாம் நற்காட்சி பொலிக ! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன் . 1970 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள் . சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது . சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்...