தலித் எழுத்துக்களைப் பொறுத்த மட்டில் பழைய தத்துவம் , கொள்கை , கோட்பாடு முதலிய வஸ்துகளை இனி கறாராகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை . உலக அளவிலான பிராந்திய எழுத்துக்களில் அப்படி யாரும் கடைப்பிடித்ததாகவும் நம்பிக்கைக்குரிய தரவுகள் இல்லை . அந்தப் பொழுதுக்கு எது சரியோ அதை நியாயப்படுத்தும் மனம் தான் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது . இலக்கியமும் இலக்கியத்திலும் அப்படித்தான் . நடப்புக்காலத்தில் எப்படிப்பட்ட எழுத்து சமூகத்தின் இயங்கியலைத் தீர்மானிக்கிறதோ அதே மாதிரியான எழுத்தை எழுதிவிட வேண்டும் . அது தான் அன்றைய பொழுதுக்கு ப் பயனளிக்கும் விஷயம் . இலக்கியம் ஒரு மாயவாத புளகாங்கிதச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளும் அதேசமயம் அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டகத்தை மாற்றிவிடக் கூடிய தீர்க்கமான வல்லமை உண்டு என்பதையும் கணக்கில் கொண்டு புதிய எழுத்து முறைமைக்கு அணியமாக வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் இன்று தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரை தலி த் அல்லாத குர லில் தலித் எழுத்தை ஒரு தலித் எழுத வேண்டும் . தலித் குரலே இல்லாமல் தலித் இலக்கியம் இருக்க முடியுமா என்றால் இருக்க முடியும் என்பதே எனது பதில். ...