Skip to main content

Posts

Showing posts from November, 2022

பூர்வீகக் குடிகளின் பாவலர் : மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர்

 பூர்வீகக் குடிகளின் பாவலர் :  மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கொண்ணூரில் வேலாயுதனார் , மயிலை தெய்வானை அம்மையார் தம்பதிக்கு 1897 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் பிறந்து 1974 அக்டோபர் 21 வரை எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் மகா மதுரகவிஞர் வீ . வே . முருகேச பாகவதர் . 2022 அக்டோபர் இருபத்தோராம் நாள் அவருக்கு 125 – வது பிறந்த நாளும் 48 வது நினைவு நாளுமாகும் . மொழிப் பற்றாளர் , எழுத்தாளர் , பேச்சாளர் , பாடகர் , நடிகர் , பாடலாசிரியர் , இசை விற்பன்னர் எனப் பன்முகம் கொண்ட பாகவதர் , ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்தம் , அறிவானந்தம் , சுயமரியாதை , சன்மார்க்கம் , சமதர்மம் , ஞானரதம் , மதுவிலக்கு , சென்னை சிங்காரம் , மாதருரிமை , வெள்ளப்பாடல் , தமிழ்ச்சோலை , காந்தி அடிகள் , தோல் பதனிடுவோர் துயரம் முதலிய நூல்களை எழுதியிருக்கிறார் . திராவிட இயக்க மேடைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பகுத்தறிவுக் கருத்துகளை கதாகலாட்சேபம் வழியாகப் பரப்புரை செய்திருக்கிறார் . சுயமரியாதை இயக்கம் , காங்கிரஸ் முதலிய அமை...