Skip to main content

Posts

Showing posts from February, 2023

அண்மைக்கால தலித் தன் வரலாற்று புதினங்கள் : மறுக்கும் கதையும் உரைக்கும் உண்மையும்

இலக்கிய வகைமைகளில் தன் வரலாறுகள் தனித்த அரசியல் நோக்கமுடையன . அதிலும் குறிப்பாக தலித் தன் வரலாற்று நூல்கள் கலகக் குரலுடன் அரசியல் பேசுபவை . சர்வதேச அளவில் தலித் தன் வரலாறுகள் நிறைய உண்டு . தமிழ்நாட்டில் தலித் தன் வரலாறுகள் நாவல் என்று அடையாளப்படுத்தப்படுகின்றன . ஒருமுறை எழுத்தாளர் பாமாவுடனான நேர்ப்பேச்சில் அவரது ‘ கருக்கு ’ தலித் தன்வரலாறு நாவல் என்று அடையாளப்படுத்தப்பட்டு வருகிற போக்கிற்காக குறைபட்டுக் கொண்டார் . தமிழ்நாட்டுக்கு வெளியே அவர் தன்வரலாறு ஆசிரியராகவே தான் அடையாளப்படுத்தப்பட்டார் . கருக்கு அடையாளம் தொடர்பாக நேர்ப்பேச்சில் குறைபட்டுக் கொண்ட பாமா , கருக்கை ‘ நாவல் ’ என்று அடையாளப்படுத்தியதற்கான எதிர்க்கருத்தை இதுவரை வைக்கவில்லை . சமூகம் எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளட்டும் என்னைப் பொருத்தவரை ‘ கருக்கு ’ என்னை நானே எழுதிப் பார்த்த பிரதி என்று தன் நிலைப்பாட்டை விளக்கினார் . தமிழ்ச்சூழலில் தலித் தன்வரலாறுகள் நாவலாகவே பார்க்கப்பட்டு வருகிறது . தலித் தன் வரலாறுகள் இந்திய அளவில் தலித் தன...