பண்பாட்டுத் தகவமைப்பு: பயணித்த வரலாறும் பயணிக்க வேண்டிய திசையும் ஞா.குருசாமி பண்பாடு என்பது பழம்பெருமை பேசுதல் என்னும் நிலையைக் கடந்து வாழ்தலுக்கான உரிமைகளை வரையறை செய்யும் அளவுகோலாக மாற்றப்பட்டிருக்கும் தற்கால டிஜிட்டல் யுகச் சூழலில் பிராந்திய பண்பாடுகளுக்கு நேர்ந்திருக்கும் சிக்கல்களை இனம் கண்டு மீட்டெழுப்புவதற்கான பணிகள் சர்வதேசிய அளவில் குறிப்பாக யுரோவை மையமாக வைத்து தொடங்கப்பட்டு இருபதாண்டு காலம் நிறைவு பெறுகிற இன்றைய தருணத்தில் தான் புதிய சூழலுக்கு தகுந்த தமிழ் பண்பாட்டு மீள் கட்டமைப்பு குறித்து செயல்பட வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கிறது. இந்த காலம் கடந்த முன்னெடுப்புக்குக் காரணம் நாமில்லை என்றாலும் இன்றைய பண்பாட்டு உருவாக்கம் அல்லது மீள் கட்டமைப்பு என்பது உலகச் சந்தையின் ஒற்றை பொருளாதார கோட்பாட்டுச் சித்தாந்தத்தின் பி;ன்புலத்தில் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் உருவாக்கும் போதே அதற்கான விளைவுகளையும் அறிந்து ஆயத்தமாகிக் கொண்டார்கள். ஆனால் மத்திய மற்றும் கிழக்காசிய நாடுகள் ஒற்றை பொருளாதாரக் கோட்பாட்டினால் ஏற்பட்ட பண்பாட்டுச் சிதைவுகளை அனுபவ ரீதியாக உணர்ந்து கொ...